செய்திகள்

கர்நாடக கவர்னரை கண்டித்து கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-18 10:41 GMT   |   Update On 2018-05-18 10:41 GMT
கோவையில் கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை:

கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, மகேஷ் குமார், கே.பி.எஸ். மணி, கே.வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், கணபதி சிவகுமார், உமாபதி, குருமூர்த்தி, கருணாகரன், திலகவதி, வக்கீல் கருப்பசாமி, சவுந்திரகுமார், ராம. நாகராஜன், குமரேசன், பாஸ்கர், வசந்தி, துளசிராஜ், காந்தகுமார், ஆடிட்டர் குருசாமி, விஜயசாந்த், இஸ்மத், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News