செய்திகள்

நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

Published On 2018-05-11 05:57 GMT   |   Update On 2018-05-11 05:57 GMT
மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
ஸ்ரீவில்லிபுத்தூர்:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi #NirmalaDeviCase

Tags:    

Similar News