செய்திகள்
பலகாரத்தில் கிடந்த எலி.

சத்தியமங்கலம் கடையில் பலகாரத்தில் ஊர்ந்த எலியால் பரபரப்பு

Published On 2018-05-10 10:56 IST   |   Update On 2018-05-10 10:56:00 IST
சத்தியமங்கலத்தில் ஒரு கடையில் பலகாரத்தின் மீது ஊர்ந்த எலியால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகளை அழித்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அறிவுரை பேரில் சத்தியமங்கலத்தில் உள்ள பலகார கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உணவு தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், குழந்தைவேலு ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கடையில் இருந்த பலகாரங்களில் எலி ஒன்று இருந்தது தெரிய வந்தது. பலகாரத்தின் மீது ஊர்ந்த அந்த எலியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர்.

பிறகு கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகள் பினாயில் மூலம் அழிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர். கடையில் உள்ள அனைத்து பலகாரங்களையும் மூடி போட்டு வைத்து தயாரிப்பு தேதியையும் ஒட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.



Tags:    

Similar News