செய்திகள்

கிருஷ்ணகிரியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்

Published On 2018-05-05 18:07 GMT   |   Update On 2018-05-05 18:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு சார்பில் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு சார்பில் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாம் குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது:- இந்த பயிற்சி முகாமில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திலிருந்து 60 மாணவ, மாணவிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்திலிருந்து 60 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தினசரி தடகளம் உள்பட பல்வேறு பயிற்சி, உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ், சீருடை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News