செய்திகள்

சிறைக்கு செல்லும் போது சசிகலா பொதுச்செயலாளர் தகுதியை இழந்து விட்டார் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-05-02 14:33 IST   |   Update On 2018-05-02 14:33:00 IST
சசிகலா சிறைக்குச் செல்லும் போதே பொதுச் செயலாளர் தகுதியினை இழந்து விட்டார் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #Sasikala #OPanneerselvam
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தி.மு.க. மேல் முறையீடு செய்யப் போகின்றதே எனக் கேட்டதற்கு செய்யட்டுமே எனவும், அரசியலில் 3-வது அணி உருவாகும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதைப் பற்றி கேட்டதற்கு 3-வது அணி தேசிய அளவிலா அல்லது தமிழக அளவிலா என அவர் தெளிவுபடுத்தட்டும்.

காவிரிக்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து கூறுகையில் அரசியலுக்காக போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்க வேண்டும்.

குட்கா வழக்கு குறித்து கேட்கையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேசக்கூடாது. ராகுல் காந்தி, திருமாவளவன் சந்திப்பு குறித்து கூறுகையில், அரசியலில் யாரும் யாரையும் சந்திக்கலாம் என்றார். நான் நிறைய நாடகங்கள் பார்ப்பேன் தினகரன் - திவாகரன் விவகாரத்தினையும் நாடகமாகத் தான் பார்க்கின்றேன்.

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கவில்லையே எனக் கேட்டதற்கு அவர் சிறைக்குச் செல்லும் போதே அந்தத் தகுதியினை இழந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #OPanneerselvam

Similar News