செய்திகள்

அண்ணா, கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டது- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2018-04-23 10:18 GMT   |   Update On 2018-04-23 10:18 GMT
அண்ணா, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் தொழில் புரட்சி எற்பட்டுள்ளதாக சிங்கம்புணரியில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #karunanidhi

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் கடந்த 4-ந்தேதி உடல் நல குறைவால் காலமானார். 5-ந்தேதி மாதவனின் இறுதிச்சடங்கு மற்றும் ஊர்வலத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் .

இந்த நிலையில் நேற்று சிங்கம்புணரியில் செ. மாதவன் இல்லம் முன்பு அமைக்க பட்ட விழா மேடையில் செ.மாதவன் உருவப்படத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன் வேலு, பெரியசாமி, தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அனைத்து கட்சி பிரமுகர்கள் விழா மேடையில் புகழ் அஞ்சலி செலுத்தி பேசினர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 1967-ல் அண்ணா ஆட்சி காலம் முதல் தி.மு.க. அமைச்சராக இருந்தவர் மாதவன். தமிழ் நாடு என பெயர் வைத்த போது அதை சட்ட அமைச்சராக இருந்து சட்டமாக்க காரணமாக இருந்தவர்களில் மாதவனின் பங்கும் உண்டு. சீர்திருத்த திருமணம் சட்டத்தை சட்ட முன்வடிவு எற்படுத்தியவர் மாதவன்.

அண்ணா, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் தொழில் புரட்சி எற்பட்டதை பட்டியலிட்டு அது பொற்காலம் என்றார். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு இது போன்ற சில உதாரணங்களை சுட்டிக் காட்டி பேசினார். #tamilnews  #mkstalin #karunanidhi

Tags:    

Similar News