செய்திகள்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் கிழிந்து பறந்த தேசிய கொடி

Published On 2018-04-12 13:15 IST   |   Update On 2018-04-12 13:15:00 IST
நாகை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தேசிய கொடி கிழிந்த நிலையில் அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை:

நாகை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தேசிய கொடி கிழிந்த நிலையில் அரை கம்பத்தில் பறந்தது.

தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததை இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உஷாரான அலுவலர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்தின் மேல்மாடிக்கு சென்று கிழிந்த கொடியை இறங்கி விட்டு புதிய தேசிய கொடியை பறக்க விட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் நிலவிய பரபரப்பு அடங்கியது.

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு கொடியை வீடு- கடைகளில் பறக்கவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி கிழிந்த நிலையில் பறந்ததால் யாராவது திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

Similar News