செய்திகள்

காவிரி உரிமை மீட்பு பயணத்தை நிறுத்துமாறு மு.க.ஸ்டாலினுக்கு சம்மன்

Published On 2018-04-12 13:13 IST   |   Update On 2018-04-12 13:13:00 IST
காவிரி உரிமை மீட்பு பயணத்தை நிறுத்துமாறு மு.க.ஸ்டாலினுக்கு சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. சேகர் சம்மன் வழங்கினார். ஆனால் அதை வாங்க ஸ்டாலின் மறுத்து விட்டார். #CauveryIssue #CauveryMangementBoard
சீர்காழி:

காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகையில் தொடங்கினார்.

பின்னர் இரவில் மயிலாடுதுறை சென்று வைத்தீஸ்வரன் கோவிலில் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. சேகர் சென்றார். அங்கு அவர் ஸ்டாலினை சந்தித்து , காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்றுடன் நிறுத்தி கொள்ளுமாறு சம்மன் கொடுத்தார். ஆனால் அதை வாங்க ஸ்டாலின் மறுத்து விட்டார்.

நாளை காலை திட்டமிட்டப்படி கடலூரில் இருந்து 1000 வாகனங்களுடன் பேரணியாக செல்வோம் என்று தெரிவித்தார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்கினார்.   #CauveryIssue  #CauveryMangementBoard

Similar News