செய்திகள்

சிவகங்கை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு - போலீசார் விசாரணை

Published On 2018-04-10 10:30 IST   |   Update On 2018-04-10 10:30:00 IST
சிவகங்கை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை ரெயில் நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News