செய்திகள்

திருப்புவனம் அரசு பள்ளியில் போதையில் மயங்கிய ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2018-04-07 09:04 IST   |   Update On 2018-04-07 10:13:00 IST
திருப்புவனத்தில் பணியின்போது மதுபோதையில் தரையில் படுத்திருந்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவேகம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்.

இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மதியம் ஆசிரியர் ரஜினிகாந்த் மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் பள்ளியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறையில் மயங்கி கிடந்தார்.

உடனே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ரஜினிகாந்தை சென்று பார்த்தபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.

அவரை எழுப்ப முயன்றும் எந்த பயனும் இல்லை. சில மணி நேரம் புலம்பி கொண்டிருந்த ஆசிரியர் ரஜினிகாந்த் பின்னர் அங்கேயே தூங்கினார்.

இதுகுறித்து சக ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உரிய விசாரணை நடத்தி, பணியின்போது மது குடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் ரஜினிகாந்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ வேண்டிய ஆசானே போதையில் பள்ளிக்கு வந்தது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News