செய்திகள்

பூந்தமல்லியில் லாரி டிரைவரை அடித்து கொன்ற கிளீனர்

Published On 2018-03-25 14:57 IST   |   Update On 2018-03-25 14:57:00 IST
பூந்தமல்லி அருகே லாரி டிரைவரை அடித்து கொன்ற கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர நட்டாக் (வயது 35), கண்டெய்னர் லாரி டிரைவர்.

இவர் லாரியில் பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடாகாவில் இருந்து சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் வெற்றிலை தோட்டத்தில் உள்ள குடோனுக்கு சென்றார்.

லாரியில் கிளீனராக சந்தோஷ் என்பவர் இருந்தார். நேற்று மாலை பூந்தமல்லி குடோனுக்கு லாரி வந்ததும் பேட்டரிகளை உடனே இறக்கிவிட்டு ஊருக்கு செல்ல வேண்டும் என்று கிளீனர் சந்தோஷ், லாரி டிரைவர் ரவீந்திர நட்டாக்கிடம் கூறினார்.

ஆனால் சரக்குகளை இரவு குடோனில் இறக்கலாம் என்று ரவீந்திர நட்டாக் கூறினார். ஆனால் இரவும் சரக்குகளை லாரியில் இருந்து இறக்கவில்லை.

இதனால் ரவீந்திர நட்டாக் கிடம் கிளீனர் சந்தோஷ் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் தூங்கச் சென்றனர்.

இன்று அதிகாலை எழுந்த சந்தோஷ் ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் தூங்கிக் கொண்டிருந்த ரவீந்திர நட்டாக்கு தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சந்தோஷ் மண்எண்ணையை எடுத்து ரவீந்திர நட்டாக் முகத்தில் ஊற்றி தீ வைத்து எரித்தார். அப்போது தீ எரிவதை பார்த்த குடோன் காவலாளி பூந்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசை கண்டதும் சந்தோஷ் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Similar News