செய்திகள்

பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

Published On 2018-03-24 09:42 IST   |   Update On 2018-03-24 09:42:00 IST
கருவேப்பிலங்குறிச்சியில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒருவர் மருத்துவபடிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், விருத்தாசலம் வள்ளலார் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இது குறித்து மருத்துவக்குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சங்கர், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  #tamilnews

Similar News