செய்திகள்

கோடை மழை எதிரொலி - சத்தி வனப்பகுதி வறட்சியின் பிடியிலிருந்து தப்புமா?

Published On 2018-03-19 11:04 GMT   |   Update On 2018-03-19 11:04 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி கோடை மழையால் வறட்சியின் பிடியில் இருந்து தப்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வனப் பகுதியில் யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதி காயத் தொடங்கியது. மரம் செடி கொடிகள் எல்லாம் காய்ந்து கிடக்கிறது. மேலும் வனவிலங்குகள் எல்லாம் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் காட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம், கடம்பூர் மற்றும் அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் மழை பெய்தது. இந்த மழையால் வனப்பகுதி தற்போது லேசாக குளிர தொடங்கி காய்ந்து போன செடி-கொடிகள் எல்லாம் கொஞ்சம்... கொஞ்சமாக புத்துயிர் பெற்று வருகிறது.

இந்த கோடை மழை இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து பெய்தால் வனப்பகுதி மேலும் குளிர்ந்து விடும். வனவிலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்து போகும் தொடர்ந்து மழை பெய்தால் வறட்சியின் பிடியிலிருந்து வனமும் தப்பி விடும்.

இதற்கிடையே வனப் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் ஓரளவில் உள்ளது. குறைவான இந்த குட்டைகளில் மேலும் தண்ணீரை நிரப்பி மேலும் யானை உள்பட வன விலங்குகள் தொற்று நோயிலிருந்து தப்பிக்க உப்புக் கட்டிகள் வைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News