செய்திகள்

மத்திய பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல் உள்ளது: ஈஸ்வரன்

Published On 2018-02-02 09:57 IST   |   Update On 2018-02-02 09:57:00 IST
மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் போலவே அமைந்திருக்கிறது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
ஈரோடு:

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-

தனி நபர் வருமானத்தின் வரி விலக்கு அளவை உயர்த்தாதது மிகப்பெரிய ஏமாற்றம். இந்திய தொழில் துறையின் முதுகெலும்பே சிறு, குறு தொழில்கள் தான். அந்த துறையை மேம்படுத்துவதற்கான தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டங்களும் இல்லை.

விவசாயம், சுகாதாரம், கல்வி உள்பட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அதன் மூலம் அந்தந்த துறைகளில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான திட்டங்கள் இல்லை.

2014 பாராளுமன்ற தேர்தலிலேயே நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நிதி அறிக்கையிலும் திட்டங்களை தீட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்த தேர்தலில் இது எதிரொலிக்கும்.

மொத்தத்தில் மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் போலவே அமைந்திருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உருவாவதற்கான திட்டங்கள் தெளிவாக இல்லை.

இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார். #tamilnews

Similar News