செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் செந்தில்பாலாஜி பேசிய போது எடுத்த படம்.

பஸ் கட்டண உயர்வு: அரசு நிதி சுமையை மக்கள் மீது திணிப்பதா?- செந்தில்பாலாஜி

Published On 2018-01-31 09:54 IST   |   Update On 2018-01-31 09:54:00 IST
பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வரும் போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்புறுத்தி வருகிறார்கள் என செந்தில் பாலாஜி பேசினார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் டி.டி.வி. தினகரன் அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சின்னம்மாவுக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும் துரோகம் இழைத்து விட்டது. வரும் 24-ந்தேதிக்குள் இந்த ஆட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வரும் போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்புறுத்தி வருகிறார்கள்.

இந்த ஆட்சியில் நிர்வாக திறமை இல்லாததால் நிதி சுமை ஏற்பட்டு அந்த சுமையை மக்கள் மீது திணித்து உள்ளார்கள். இது நியாயமா? மக்கள் எவ்வளவு நாள் தான் இந்த ஆட்சியின் அலங்கோலத்தை, சீர் கேட்டை பார்த்து கொண்டிருப்பார்கள்?.

அம்மா இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் பஸ் தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்பட தேவைகளுக்கு நிதித்துறை மூலம் வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு மாறாக மக்களிடத்தில் அந்த சுமையை சுமத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

தனிக்கட்சி ஆரம்பிப்போம் என எந்த இடத்திலும் துணை பொதுச்செயலாளர் சுட்டி காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவை பெற்று அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரில் செயல்பட தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார். #Tamilnews

Similar News