செய்திகள்

குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க வலியுறுத்தி 8 இடங்களில் போராட்டம்

Published On 2018-01-30 08:31 GMT   |   Update On 2018-01-30 08:31 GMT
குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க வலியுறுத்தி 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
குழித்துறை:

குமரி மாவட்டத்தில் இனையம் பகுதியில் அமைய இருந்த சரக்கு பெட்டக துறைமுகம், பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மற்றும் கீழ மணக்குடி இடையே அமைய இருக்கிறது.

கன்னியாகுமரி பகுதியிலும் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது போல இங்கு உடனடியாக துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், துவரங்காடு, ஈத்தாமொழி, தக்கலை, ஆற்றூர், மார்த்தாண்டம் சந்திப்பு, கழுவன்திட்டை, படந்தாலுமூடு ஆகிய 8 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.

கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் துறைமுக ஆதரவாளர்கள் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் அருகே சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஜெயக்குமார், விஜயகுமார், சுடர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி நாஞ்சில் டொமினிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி பேசினார்.

இது போல குழித்துறை நகரம் மற்றும் மேல்புறம் ஒன்றியம் சார்பில் துறைமுக ஆதரவு இயக்கத்தினரின் சத்தியாகிரக போராட்டம் கழுவன்திட்டை சந்திப்பில் நடந்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். விஜயபிரசாத், சுரேஷ் சந்திரன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். #tamilnews
Tags:    

Similar News