செய்திகள்

வடமதுரை அருகே கார்கள் மோதல் சார்பதிவாளர் உள்பட 5 பேர் நசுங்கினர்

Published On 2018-01-29 15:52 IST   |   Update On 2018-01-29 15:52:00 IST
வடமதுரையில் கார்கள் விபத்துக்குள்ளானதில் சார்பதிவாளர் உள்பட 5 பேர் உடல் நசுங்கினர்.

வடமதுரை:

சென்னையைச் சேர்ந்தவர் சம்பத். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார்பதிவாளராக உள்ளார். இவரது உறவினர்கள் சரத், கந்தன், மகேஷ் ஆகியோர் ஒரு காரில் நெல்லை சென்று விட்டு சென்னைக்கு காரில் வேகமாக வந்து கொண்டு இருந்தனர்.

வடமதுரை மூக்கரை பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் இன்னொரு காரில் வந்த நிரேந்தர்பாபு, ஹரிபாபு ஆகியோர் காருடன் தலைகுப்புற கவிழ்ந்தனர்.

சம்பத்குமார் ஓட்டி வந்த காரில் அவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கினர். உயிருக்கு போராடிய 5 பேரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News