செய்திகள்

பஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்: அய்யாகண்ணு

Published On 2018-01-29 13:37 IST   |   Update On 2018-01-29 13:37:00 IST
ஏழை எளிய மக்கள், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என அய்யாகண்ணு கூறியுள்ளார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாகண்ணு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை வறட்சி மாநிலமாக மாற்றி கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவே மத்திய அரசு காவிரி தண்ணீர் பெற்றுதராமல் உள்ளது.

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டாமல் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுகின்றன.

விவசாயிகளை சிறு.குறு விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்ககூடாது அனைவரும் விவசாயிகள் தான். அனைவருக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வருங்கால சந்ததியை பாதுகாக்க 32 மாவட்டங்களில் 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். ஏழை எளிய மக்கள், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்.

பயிர் காப்பீடு தொகை வழங்குவதை மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனத்திடம் கொடுத்ததால் விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News