செய்திகள்
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

Published On 2018-01-26 05:20 GMT   |   Update On 2018-01-26 05:20 GMT
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால் ரோட்டில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர்.
கோபி:

கோபி வாய்க்கால் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது.

இந்த கடையில் அந்த பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுக்கடையால் ‘‘போதை’’ ஏற்றிக் கொண்டு வீட்டு வாசலில் மயங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

இதனால் அந்த மதுக்கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவையொட்டி மதுக்கடைக்கு எதிரிப்பு தெரிவித்தும் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. #Tamilnews
Tags:    

Similar News