செய்திகள்
கைதான அருண்சங்கர், சதீஷ் சம்பத் ஆகியோரை படத்தில் காணலாம்

டாக்டர் போல் பேசி ஆஸ்பத்திரியில் ரூ.8 லட்சம் மோசடி: முன்னாள் கேஷியர் தம்பியுடன் கைது

Published On 2017-11-11 07:41 GMT   |   Update On 2017-11-11 07:41 GMT
ஈரோடு அருகே பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டர் குரலில் பேசி 8 லட்சம் மோசடி செய்த முன்னாள் கேஷியர் மற்றும் அவரது தம்பியையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு, பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் ஆஸ்பத்திரி கோவையிலும் இயங்கி வருகிறது.

கடந்த 6-ந் தேதி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், அவரது தாயாரும், கோவைக்கு சொந்த வேலை விசயமாக சென்று இருந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி கேஷியர் கார்த்திக்குக்கு சிறிது நேரத்தில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசியவர் நிர்வாக இயக்குனரின் குரலில் பேசியுள்ளார்.

தனக்கு அவசரமாக ரூ. 8ž லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், நான் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதை கேஷியர் கார்த்திக் நம்பினார்.

சில நிமிடங்களில் ஒரு கொகுசு காரில் ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் அனுப்பி வைத்ததாக கூறினார். ரூ.8ž லட்சம் பணத்தை கார்த்திக் அவரிடம் கொடுத்து அனுப்பினார். அந்த நபரும் பணத்தை வாங்கி கொண்டு வேகமாக சென்று விட்டார்.

இந்த நிலையில் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு இரவில் நிர்வாக இயக்குனரும் அவரது தாயும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கணக்குகளை சரிபார்த்த போது ரூ.8ž லட்சம் குறைந்தது குறித்து கார்த்திக்கிடம் கேட்டார்.

அப்போது அவர் நடந்த விவரங்களை கூறினார். இதை அதிர்ச்சி அடைந்த நிர்வாக இயக்குனரும், அவரது தாயும் நாங்கள் பணம் கேட்கவே இல்லை என்றனர். அப்போதுதான் யாரோ டாக்டர் குரலில் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து கேஷியர் கார்த்திக் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். கேஷியர் கார்த்திக்கிடம் பேசிய போன் எண்ணையும் வைத்து விசாரணை நடந்தது.

விசாரணையின்போது இந்த வழக்கில் ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்த அருண்சங்கர் (வயது 32), மற்றும் அவரது தம்பி சதீஷ் சம்பத் (29) ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

                                                  பறிமுதல் செய்யப்பட்ட கார்

ஈரோடு டவுன் ஸ்டேட் பேங்க் ரோட்டில் பதுங்கி இருந்த அவர்களை வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதில் அருண்சங்கர் என்பவர் மோசடி நடந்த தனியார் ஆஸ்பத்திரியில் 2½ வருடமாக கேஷியராக பணியாற்றினார். சொந்த தொழில் தொடங்கியதால் கேஷியர் வேலையை விட்டு நின்றார்.

எனவேதான் அவருக்கு நிர்வாக இயக்குனரின் நடவடிக்கைகளும், அவர் எங்கு செல்வார்? எப்படி பேசுவார்? என்பதும் நன்கு தெரியும்.

இதையெல்லாம் அறிந்து தான் தனது தம்பி சதீஷ் சம்பத்துடன் சேர்ந்து இந்த நூதன பண மோசடியை அரங்கேற்றியுள்ளார். டாக்டர் குரலில் பேசினால் சந்தேகம் சந்தேகம் வராது என்ற எண்ணத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக கைதான அண்ணனும், தம்பியும் கூறினர்.

அவர்களிடம் இருந்து ரூ.8ž லட்சம் பணத்தையும், 2 செல்போன்களையும், பணம் வாங்குவதற்காக ஆஸ்பத்திரிக்கு அவர்கள் வந்த காரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News