செய்திகள்

சசிகலா உறவினர்களின் சொத்துக்கள் எப்படி வந்தது? - வருமான வரித்துறை விளக்க வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

Published On 2017-11-10 13:32 IST   |   Update On 2017-11-10 13:33:00 IST
சசிகலா, தினகரன் மற்றும் உறவினர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைக்கு பிறகு சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டன? என்பதை வருமான வரித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஈரோடு:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை என்பது காலதாமதமான நடவடிக்கை.

இந்த சோதனை அரசியலுக்காக நடக்கிறதோ... தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கிறதோ அல்லது தினகரனை மிரட்டுவதற்காக நடக்கிறதோ இப்படி எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டிய ஒன்று.

கைப்பற்றப்படும் சொத்துகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

சோதனைக்கு பிறகு சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டன? என்பதை வருமான வரித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.

இந்த சோதனை வருமானம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல ஊழலும் சம்பந்தப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நடக்கின்ற இந்த சோதனை மூலம் கண்டு பிடிக்கப்படுகிற உண்மைகளும் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

அரசியல் அழுத்தத்துக்காக இந்த வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும் கூட இது தேவை என்பது தான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு ஈஸ்வரன் அதில் கூறியுள்ளார்.

Similar News