செய்திகள்
லத்தேரியில் நிறுத்திவைக்கப்பட்ட சரக்கு ரெயில்.

காட்பாடி அருகே சரக்கு ரெயிலில் திடீர் தீ

Published On 2017-11-02 11:53 IST   |   Update On 2017-11-02 11:53:00 IST
காட்பாடி அருகே சரக்கு ரெயில் சக்கரத்தில் திடீர் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

பெங்களூரில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயில் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது. குடியாத்தம் அடுத்த காவலூர் அருகே வந்தபோது ரெயில் பெட்டி சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு தீ பற்றி புகை எழுந்தது.

இதனை கண்டு பிடித்த ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில் மெதுவாக இயக்கப்பட்டது.

லத்தேரி ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள லூப்லைனில் ரெயில் நிறுத்தப்பட்டது. காட்பாடியில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கபட்டனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சரியான நேரத்தில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சக்கரம் சுற்றாமல் தண்டவாளங்களை பெயர்ந்து எறிந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

பழுதான சரக்கு ரெயில் லூப்லைனில் நிறுத்தப்பட்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் வழக்கம் போல சென்றன.

Similar News