செய்திகள்
அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி
அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அ.தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
அந்தியூர், பவானி, சென்னிமலை, கோபி பகுதிகளை சேர்ந்த பலர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.
நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் பலியானார்.
அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி ரமணி. இவர்களுடைய மூத்த மகன் ரஞ்சித்குமார் (வயது 28). பி.பி.எம். பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி விடுமுறைக்காக ரஞ்சித்குமார் கடந்த 17-ந் தேதி ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ரஞ்சித்குமாருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அதனால் தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2 நாட் கள் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நேற்று மாலை ரஞ்சித்குமார் ரத்த வாந்தி எடுத்தார். உடனே டாக்டர்கள் அவருடைய ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆனால் சிறிதுநேரத்திலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கிடைத்த ரத்த மாதிரி சோதனை அறிக்கையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிந்தது. ரஞ்சித்குமார் பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆனது.