செய்திகள்
குன்றி வனப்பகுதியில் பலத்த மழை குண்டேரிபள்ளம் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது

சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே குண்டேரிபள்ளம் அணை உள்ளது. இந்த அணை 42 அடி கொள்ளளவை கொண்டது. அணையையொட்டி உள்ள விளாங்கோம்பை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 30 அடியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான குன்றி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் விளாங்கோம்பை வனப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இதனால் குண்டேரிப் பள்ளம் அணைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. 5212 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
நேற்றிரவு ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 10 அடி உயர்ந்தது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 40 அடியாக இருந்தது. முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடி மட்டுமே உள்ளது.
இதற்கிடையே காலை 9 மணி நிலவரப்படி நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 310 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஒரே நாளில் குண்டேரிப்பள்ளம் அணை 10 அடி உயர்ந்ததையொட்டி டி.என்.பாளையம், சத்தியமங்கலம், கோபி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.