செய்திகள்
நாகை விபத்து எதிரொலி: பழமையான பணிமனைகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு திட்டம்
நாகை அருகே ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மிகவும் பழமையான பணிமனை கட்டிடங்களைக் கண்டறிந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
நாகை:
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து முதலமைச்சரிடம் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது, உடனடியாக அவரை பொறையார் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியை கவனிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுபற்றி போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ‘பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 டிரைவர்கள் ஒரு கண்டக்டர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் உரிய நிவாரணம் அறிவிப்பார். விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பணிமனை கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதற்கிடையே, அரசின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறி, பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.