செய்திகள்
புதுக்கோட்டை அருகே இன்று டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு இன்று சிறுமி இறந்தார். சிறுமி பலியான சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் பைரவி (வயது 4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல.கே.ஜி. படித்து வந்தாள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பைரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது பைரவிக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பைரவியை அவரது பெற்றோர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பைரவி உயிரிழந்தாள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கந்தர் வக்கோட்டையை சேர்ந்த சிறுமி லலிதா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானாள். இந்நிலையில் இன்று பைரவி பலியான சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.