செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு

Published On 2017-10-04 11:06 IST   |   Update On 2017-10-04 11:06:00 IST
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயில் அருகே இன்று காலை கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயில் அருகே இன்று காலை கேட்பாரற்று மர்ம பை கிடந்தது.

சந்தேகம் அடைந்த பயணிகள் இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை செய்தனர். அந்த பையில் லேப்-டாப் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. வெடிகுண்டு எதுவும் இல்லை.

பயணிகள் யாரேனும் தங்களது பையை தவறவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அதில் உள்ள ஆவணங்களை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மர்ம பை சோதனை நடந்தது. இதனால் விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News