செய்திகள்

மாணவர்களுக்கு போலீஸ் தடை: இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2017-09-02 12:38 IST   |   Update On 2017-09-02 12:38:00 IST
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.
அரியலூர்:

தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இன்று குழுமூருக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஊரின் எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிற்பகலில் மாணவி அனிதாவுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு உடல் தகனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

Similar News