செய்திகள்

சிவகங்கையில் பெண்கள் உள்பட 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

Published On 2017-08-18 06:20 GMT   |   Update On 2017-08-18 06:21 GMT
சிவகங்கையில் பெண்கள் உள்பட 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை நகர் காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர், புதுவயல் ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மேலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் இளையான்குடியைச் சேர்ந்த முபாரக் அலியின் 1 வயது மகள் மரியம், புதுவயலைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சூர்யா, அவரது சகோதரி வனஜா மற்றும் 5 ஆண்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். டெங்கு அறிகுறியால் சிகிச்சை பெறுபவர்கள் 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News