செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் சொத்துகளை முடக்கிய அதிகாரி பணியிட மாற்றம்

Published On 2017-08-02 11:28 IST   |   Update On 2017-08-02 11:28:00 IST
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான நோட்டீஸ் ஒன்று புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவுக்கு கடந்த 28-ந் தேதியே அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம், குவாரி ஆகியவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான நடவடிக்கைகளில் மாவட்ட பதிவாளர் சசிகலா அரசின் வழிகாட்டுதல் படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் மாவட்ட பதிவாளர் சசிகலாவை விருதுநகருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் காரைக்குடியைச்சேர்ந்த ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News