செய்திகள்

பவானி பகுதியில் டெங்கு காய்ச்சல் குறைந்து விட்டது: அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

Published On 2017-07-24 11:45 GMT   |   Update On 2017-07-24 11:45 GMT
பவானியில் உள்ள நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு வைரஸ் காய்ச்சல் போன்ற வகைகள் அதிக அளவில் குறைந்து விட்டது என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

பவானி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெருந்துறை மருத்துவ கல்லூரி பவானி அரசு மருத்துவமனை பவானி நகராட்சி ஆகியவை இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை நடத்தியது. முகாமை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் பொது மருத்துவம், கண், மூக்கு, தொண்டை, சிகிச்சை பல் மருத்துவம், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை சிறுநீரில் சர்க்கரை அளவு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் பொது மக்களிடம் அமைச்சர் பேசும் போது, ‘‘பவானியில் உள்ள நகராட்சி ஊராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு வைரஸ் காய்ச்சல் போன்ற வகைகள் அதிக அளவில் குறைந்து விட்டது. போதிய மருத்துவ வசதிகள் உள்ளது. யாரும் கவலைபட வேண்டாம்’’ என தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் பிரபாகர், நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண ராஜ், ஒன்றியகுழு தலைவர் தங்கவேலு, அச்சுக்கூட தலைவர் சித்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News