செய்திகள்

தாம்பரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.30லட்சம் வைர நகைகள் கொள்ளை: டிரைவர் கைது

Published On 2017-06-12 12:35 IST   |   Update On 2017-06-12 12:35:00 IST
தாம்பரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.30லட்சம் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை:

கிழக்கு தாம்பரம் ஆண்டாள் தெருவில் வசித்து வருபவர் சிவராமகிருஷ்ணன். தொழில் அதிபர். ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் பீரோவில் இருந்த நகையை சரிபார்த்த போது வைரத்தாலான வளையல், கம்மல் உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும்.

இது குறித்து சிவராமகிருஷ்ணன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் முடிச்சூரை சேர்ந்த சக்கரவர்த்தி நகையை கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

சிவராமகிருஷ்ணன் வீட்டிற்குள் வந்து சென்ற போது பீரோவில் இருந்த வைர நகைகளை டிரைவர் சக்கரவர்த்தி எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.

இந்த நகைகளை சீர்காழி, சிதம்பரம் பகுதியில் விற்றதாக கூறினார். போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Similar News