செய்திகள்
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்: ஆந்திர வாலிபர் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த காஜாசபீர் என்பவரின் சூட்கேசை சோதனை செய்தபோது பார்சல் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது பிளாஸ்க் இருந்தது.
அதன் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பிளாஸ்கை சோதனை செய்தனர். அதில் சூடு குறையாமல் இருப்பதற்கு வைக்கப்படும் தெர்மாகோலை எடுத்து விட்டு அதில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தியது தெரியவந்தது. தலா 100 கிராம் எடை கொண்ட 11 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.33 லட்சமாகும்.
இதையடுத்து காஜாசபீர் கைது செய்யப்பட்டார். யாருக்காக தங்க கட்டிகளை யாருக்காக கடத்தி வந்தார்? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.