செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2017-03-29 09:49 IST   |   Update On 2017-03-29 09:49:00 IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே உள்ள கீழையூரில் அரசு உதவி பெறும் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மணிகண்டன் (42) பணியாற்றி வருகிறார்.

இவர் தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் முத்தழகன், தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனாலும் பெற்றோர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Similar News