செய்திகள்
குடிசை வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை: 2 பேர் கைது
கோபி அருகே காட்டில் உள்ள குடிசை வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்துவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கும்பிகரடு என்ற இடத்தில் காட்டுப்பகுதிக்குள் ஒரு குடிசை வீடு உள்ளது. இந்த குடிசை வீட்டுக்குள் ரேசன் அரிசிகளை மூட்டை.. மூட்டையாய் பதுக்கி வைத்து வெளி மாவட்டத்துக்கும், வெளிமாநிலத்துக்கும் கடத்தி விற்கப்படுவதாக சிறுவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இங்கு பதுக்கி வைக்கப்பட்டு உள்ள ரேசன் அரிசி மூட்டைகளை இரவு நேரத்தில் வேனில் கடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதையொட்டி சிறுவலூர் போலீசார் புகார் கூறப்படும் வீட்டுக்கு திடீரென சென்ற அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வேனில் 50 மூட்டை ரேசன் அரிசியை ஏற்றி கடத்த தயாராக இருந்தனர். போலீசார் அரிசி மூட்டைகளுடன் அந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு ரேசன் அரிசியை கடத்தி செல்ல தயாராக இருந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த அப்துல் என்பவரையும் கோபி அடுத்த கலிங்கியத்தை சேர்ந்த டேவிட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சிறுவலூர் போலீசார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் எங்கெங்கு ரேசன் அரிசியை கடத்த வந்தார்கள்? எங்கு விற்பனை செய்து வந்தனர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.