செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகம்: ஒரு அவுன்ஸ் ரூ.40-க்கு விற்பனை

Published On 2017-02-15 10:04 GMT   |   Update On 2017-02-15 10:04 GMT
கழுதைப்பால் குடித்தால் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலனுக்கு உகந்தது. மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகரில் முதியவர் ஒருவர் 2 கழுதைகளை வீதிகள் வழியாக ஓட்டி வந்தார். அவர் கழுதைப்பால் வேண்டுமா? கழுதைப்பால் என குரல் எழுப்பினார்.

இந்த குரலை கேட்டவுடன் கழுதைப்பாலா? என பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் கழுதைப்பால் விற்பனை செய்யும் முதியவர் முன்பு கூட்டம் கூடியது.

அப்போது பொதுமக்கள் அந்த முதியவரிடம் நீங்கள் யார்? இந்த காலத்தில் வித்தியாசமாக கழுதைப்பால் விற்பனை செய்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு அந்த முதியவர் என் பெயர் ராமசாமி (வயது 62). திட்டக்குடியை சேர்ந்தவன் என்றார். நான் பல வருடங்களாக கழுதைப்பால் விற்பனை செய்து வருகிறேன்.

கழுதைப்பால் குடித்தால் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலனுக்கு உகந்தது. மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். ஜீரணசக்தி அதிகரிக்கும் என்றார்.

மாட்டுப்பால் போன்று கறந்துவைத்து விற்பனை செய்ய முடியாது. கழுதைப்பாலில் நோய் தடுப்பு சக்தி அதிகம் உள்ளது. கழுதைப்பாலை கறந்தஉடனே பருகவேண்டும் என்றார். இதைக்கேட்ட பொதுமக்கள் கழுதைப்பாலை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

ஒரு பாலாடை (1 அவுன்ஸ்)-ரூ.40 க்கு விற்பனையானது. கழுதைபாலில் இவ்வளவு நன்மை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கூறிக்கொண்டே கழுதைப்பாலை வாங்கிச்சென்றனர்.

Similar News