செய்திகள்

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்: தீபா ஆதரவாளர்கள்

Published On 2017-02-13 13:35 IST   |   Update On 2017-02-13 13:35:00 IST
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரங்கிப்பேட்டை:

கடலூர் மேற்கு மாவட்ட ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் புவனகிரியில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

நகர ஒருங்கிணைப்பாளர் காத்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன் மற்றும் தில்லை வேழவன், சரவணகாந்தி, பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், சட்டமன்ற வேட்பாளராக தீபா போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்வது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் வள்ளி சீனுவாசன், கஜேந்திரன், ராமலிங்கம், இளங்கோவன், பெருமாள், வின்சென்ட் ராமச்சந்திரன், மோகன்ராஜ், கம்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார்.

Similar News