செய்திகள்

நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79 பேர் கைது

Published On 2017-02-13 10:53 IST   |   Update On 2017-02-13 10:53:00 IST
நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 79 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நெல்லை:

தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் சட்டம்- ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தலாம் என்று சந்தேகப்படுபவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து வருகிறார்கள்.

நேற்று காலை வரை நெல்லை மாவட்டம் முழுவதும் மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இன்று காலை வரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட பகுதியில் 20 பேரும், மாநகர பகுதியில் 14 பேரும் அடங்குவார்கள்.

இதில் பழைய ரவுடிகள், குடித்து விட்டு ரகளை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் இன்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சந்தேகப்படுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

Similar News