செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீசாரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அர்ஜூன்சம்பத்

Published On 2017-01-31 05:24 GMT   |   Update On 2017-01-31 05:24 GMT
சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் - போலீஸ் மோதலில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறியுள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனவரி 3-ந்தேதி தியாகிகள் தினம் ஆகும். தியாகிகளுக்கு அரசு ஓய்வூதியம், சலுகைகள் முறையாக இன்னும் வழங்கப்படவில்லை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைத்திட வேண்டும.

1967-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்ற அடிப்படையில் அரசு சலுகைகள் தரப்படுகிறது. இந்து இயக்க நிர்வாகிகளுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள் விடப்படுகிறது. எனவே அரசு இந்து இயக்க நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பினை தரவேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் - போலீசார் மோதலில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்திட வேண்டும். இதில் மக்கள் நல கூட்டணியினர் எதிர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய நாட்டிற்கு எதிராக செயல் படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News