செய்திகள்

தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் இயக்கம்

Published On 2017-01-27 05:55 GMT   |   Update On 2017-01-27 05:55 GMT
தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் இயக்கப்பட்டன. 1, 4 யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அனல்மின் நிலைய பகுதியில் உள்ள ஸ்விட்ச் யார்டில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தால் அனல் மின்நிலைய அனைத்து யூனிட்டுகளும் நிறுத்தப்பட்டன. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவற்றை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்தது.

இதைத் தொடர்ந்து 2, 3, 5-வது யூனிட்டுகள் நேற்று இயக்கப்பட்டன. 1, 4 யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. அவற்றிலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News