செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 2-நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் தீவிரம்

Published On 2017-01-18 07:43 GMT   |   Update On 2017-01-18 07:43 GMT
நெல்லையில் இன்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் வ.உ.சி. மைதானத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெல்லை:

ஜல்லிக்கட்டு நடந்த அனுமதி வழங்கக்கோரி நெல்லையில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாலை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நள்ளிரவு வரை இந்த பேராட்டம் தொடர்ந்தது. அதன் பிறகும் சுமார் 100 இளைஞர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இன்று 2-வது நாளாக நெல்லையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் செய்து வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளிலும் இன்று இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Similar News