செய்திகள்

நம்பியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை: தாய் போலீசில் புகார்

Published On 2016-12-25 16:05 IST   |   Update On 2016-12-25 16:05:00 IST
நம்பியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நம்பியூர்:

நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் குமார் (வயது31). தொழிலாளி. இவரது மனைவி பாரதி (22). இவர்களுக்கு தரணிஸ்ரீ (3) என்ற மகளும், ஸ்ரீதரன் (1) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் குமார் வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் மனம் உடைந்த பாரதி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். நீண்ட நேரமாக குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பாரதி வீட்டு கதவை தட்டி உள்ளனர்.

ஆனால் பதில் வர வில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது பாரதி தூக்குபோட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கதவை உடைத்து பாரதியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பாரதியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாரதியின் தாய் பழனியம்மாள் தனது மகளின் சாவில் மர்ம இருப்பதாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் கோபி டி.எஸ்.பி.செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் பாரதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கோபி சப்- கலெக்டர் கிருஷ்ணன்உன்னியும் விசாரித்து வருகிறார்.

Similar News