செய்திகள்
சாய்பாபா சிலைக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை அலங்காரம் செய்து வழிபட்ட காட்சி

பணப்பிரச்சினையிலிருந்து மீள பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து வழிபாடு

Published On 2016-12-09 06:03 GMT   |   Update On 2016-12-09 06:03 GMT
ஈரோடு கவுந்தபாடியில் அனைவரும் விரைவில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று சாய்பாபாவுக்கு பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நகரின் மைய பகுதியில் உள்ள பழனிசாமி வீதி விநாயகர் கோவில் வளாகத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மற்றும் விசே‌ஷ தினங்களில் சிறப்பு புஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியை சுற்றி உள்ள ஆண்கள், பெண்கள் அதிக அளவில் வழிபாடுகளில் கலந்து கொள்கிறார்கள். தற்போது பழைய 1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் ‘‘அனைவரும் விரைவில் இந்த பணப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும்’’ என்று சாய்பாபாவுக்கு பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபாவின் பக்தி பாடல்பாடி வேண்டிக்கொண்டார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டு குழுவினர்கள் செய்திருந்தார்கள்.



Similar News