செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சத்துணவு அமைப்பாளர்கள் 2 பேர் சஸ்பெண்டு: கலெக்டர் நடவடிக்கை

Published On 2016-11-24 10:24 IST   |   Update On 2016-11-24 10:25:00 IST
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்து வந்த 2 சத்துணவு அமைப்பாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொட்டகுடி மற்றும் சேத்திடலில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கணபதி கடந்த 17-ந்தேதி கொட்டகுடி சத்துணவு மையத்திலும், நேற்று (23-ந் தேதி) சேத்திடல் சத்துணவு மையத்திலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கொட்டகுடி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த முத்தழகு, சேத்திடல் சத்துணவு அமைப்பாளர் தங்கவேலு ஆகியோர் தங்களது மையத்தில் இல்லை. மேலும் மாதந்தோறும் ஆய்வு கூட்டத்தின் வாயிலாக முன் அறிவுரைகள் வழங்கப்பட்டும் எவ்வித விடுப்பு விண்ணப்பமும், முன் தகவலுமின்றி மையத்திற்கு வருகை தராமலும், பதிவேடுகள் ஏதும் முறையாக பராமரிக்காத சூழ்நிலையில் இருந்தது.

இதையடுத்து முத்தழகு, தங்கவேலு ஆகிய இருவரையும் மாவட்ட கலெக்டர் நடராஜன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்தார்.

Similar News