செய்திகள்

மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையம் அமைக்க முடிவு

Published On 2016-11-18 19:21 IST   |   Update On 2016-11-18 19:21:00 IST
மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையம் அமைக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படாத வகையில் தீர்வு காணும் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் “வங்கிகளின் வணிகத் தொடர்பாளர்கள் மூலமாக பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். துறைமுகங்கள் அருகே ஏ.டி.எம்.களில் போதிய பண இருப்பு உறுதி செய்யப்படும். மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்படும்” ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Similar News