செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் டிரைவர் கொலையில் 7 பேர் கும்பல் கைது

Published On 2016-11-02 12:11 IST   |   Update On 2016-11-02 12:11:00 IST
கைது செய்யப்பட்ட 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவன்தாங்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் 2 கார் களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார்.

கடந்த 30-ந்தேதி இரவு சிவன்தாங்கல் பள்ளி அருகே கார்த்திக் தனது நண்பர் ஜெயவேலுவுடன் பேசி கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்று தப்பி விட்டது.

இதுகுறித்தி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த முரளி தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்தது தெரிய வந்தது.

நேற்று இரவு சிவன்தாங்கல் கங்கையம்மன் கோவில் அருகே பதுங்கிருந்த முரளி, அவரது நண்பர்கள் ஜெகதீஸ்சன், புவனேஸ்குமார், ராஜ், தினேஷ், சரத்குமார், சின்ராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். போலீசாரிடம் முரளி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும் சொந்தமாக கார்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தேன். இதில் எனக்கும் கார்த்திக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. 5 ஆண்டுக்கு முன்பு என்னிடம் இருந்த காண் டிராக்ட் கார்த்திக் மூலம் ரத்து ஆனது.

இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்படும். கடந்த 18-ந்தேதி ஒரு சாவு ஊர் வலத்தில் பங்கேற்ற போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்திக் என்னை கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News