செய்திகள்
பெண் போலீஸ் ராதிகா தன்னை ஐ.பி.எஸ். சீருடையில் இருப்பது போன்று கிராபிக்ஸ் செய்த புகைப்படம்.

அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்த பெண் போலீஸ் சஸ்பெண்டு

Published On 2016-11-01 15:07 IST   |   Update On 2016-11-01 15:07:00 IST
அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்த பெண் போலீஸை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அவர் சரிவர பணம் அனுப்பாததால், லதா இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று, போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராதிகா(33) என்பவரிடம் புகார் செய்தார். அவர் செல்வகுமாரின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசவே, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. ஏற்கனவே திருமணமாகியும் ராதிகா செல்வகுமாருடன் பேசி வந்துள்ளார்.

மேலும் கடந்த 28-ந்தேதி, செல்வகுமாரை ராதிகா திருமணம் செய்து கொண்டார். இது குறித்து லதா, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் பெண் போலீஸ் ராதிகா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார்கிரி உத்தரவிட்டார்.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் ராதிகா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் இன்று ராதிகாவை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.

Similar News