செய்திகள்

தீபாவளிக்கு புது துணி எடுத்து தரவில்லை என கூறி மனைவி கண்டித்ததால் வி‌ஷம் குடித்து கணவர் தற்கொலை

Published On 2016-10-30 16:41 IST   |   Update On 2016-10-30 16:41:00 IST
தீபாவளிக்கு புது துணி எடுத்து தரவில்லை என கூறி மனைவி கண்டித்ததால் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வடமதுரை போலீஸ் சரகம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். (வயது 50). விவசாயி. அவரது மனைவி செல்வி. தீபாவளி பண்டிகையையொட்டி செல்வி தனது கணவரிடம் புதுதுணி மற்றும் ஜவுளி வாங்கி தரும்படி கூறினார்.

ஆனால் ஆனந்தன் வாங்கி கொடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த செல்வி தனது கணவன் என்று கூட பாராமல் வாய்க்கு வந்தபடி திட்டினார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் தற்கொலை செய்வது என தீர்மானித்தார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆனந்தன் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து செல்வி அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு போராடிய ஆனந்தனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News