செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் காதலர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2016-10-09 07:34 IST   |   Update On 2016-10-09 07:34:00 IST
மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் அவரது காதலர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.எஸ்.கார்டியாலஜி மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 11-ந்தேதி இரவு மாமல்லபுரம் ஒத்தவாடை பிரதான குறுக்கு தெருவில் உள்ள தனியார் விடுதியில் காதலருடன் தங்கினார். காதலரின் நண்பரும் அடுத்த அறையில் தங்கினார். காதலர்கள் மது அருந்தி உல்லாசமாக இருந்துவிட்டு தூங்கினர்.

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மருத்துவ கல்லூரி மாணவி திடீரென அலறினார். அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர் ஒருவர் அங்கு சென்றார். மற்ற ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது தன்னை யாரோ பலாத்காரம் செய்ததாக கூறினார். இது குறித்து அந்த மாணவி மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் இருவரின் உயிர் அணுக்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் விடுதி ஊழியரும் பரிசோதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் காதலர், காதலரின் நண்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். மருத்துவ பரிசோதனைக்கும், விசாரணைக்கும் தாங்கள் அழைக்கும்போது வருமாறு கூறி, அப்போது அவர்களை போலீசார் விடுவித்தனர்.

பின்னர் விசாரணைக்காக இருவரையும் போலீசார் அழைத்தபோது, அவர்கள் ஒத்துழைக்காமல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News