செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு

Published On 2016-09-28 06:42 GMT   |   Update On 2016-09-28 06:42 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 9 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 27 மாவட்ட கவுன்சிலர்கள், 252 ஒன்றிய கவுன்சிலர்கள், 633 ஊராட்சி பதவிகள் என 6,788 பதவிகளுக்கான தேர்தல் அக்-17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினரால் தேர்தல் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான வேட்புமனுவை இதுவரை யாரும் தாக்கல் செய்யவராததால் நகராட்சி அலுவலகம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

நகராட்சிக்குட்பட்ட 55 வாக்குசாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரியான காஞ்சீபுரம் கமி‌ஷனர் (பொறுப்பு) சேகர் பார்வையிட்டார். அங்கு வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்ட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்மதா (வாலாஜாபாத் 3 மற்றும் 4-வது மாவட்ட கவுன்சிலர் வார்டுகள், காஞ்சிபுரம் 1 மற்றும் 2-வது வார்டுகள், உத்திரமேரூர் 20 மற்றும் 21-வது வார்டுகள்- செல்போன் எண்.95855 48311)

சரஸ்வதி (அச்சிறுபாக்கம் 22 மற்றும் 23-வது வார்டுகள், சித்தாமூர் 24 மற்றும் 25- வது வார்டுகள், லத்தூர் 26 மற்றும் 27-வது வார்டுகள், மதுராந்தகம் 18 மற்றும் 19 வது வார்டுகள் செல்: 94450 34132)

சக்திவேல் (திருப்போரூர் 13 மற்றும் 14-வது வார்டுகள், திருக்கழுக்குன்றம் 15, 16 மற்றும் 17-வது வார்டுகள், காட்டாங்கொளத்தூர் 11 மற்றும் 12வது வார்டுகள் செல்: 94445 31758)

கருணாகரன் (ஸ்ரீபெரும்புதூர் 5 மற்றும் 6-வது வார்டுகள், குன்றத்தூர் 7 மற்றும் 8-வது வார்டுகள், செயிண்ட் தாமஸ் மவுண்ட் 9 மற்றும் 10-வது வார்டுகள் செல்: 94436 19739)

Similar News